இந்தியா

1.இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மார்ச் 30ல் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதையடுத்து,புதிய துணை வேந்தராக, முன்னாள் DRDO இயக்குனர் மற்றும் விஞ்ஞானியான V.K. சரஸ்வத், 5 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2.இந்தியாவின் உயிரி சுத்திகரிப்பு ஆலை(எத்தனால் உற்பத்தி ஆலை) புனேவில் துவங்கப்பட்டுள்ளது.
3.காபி வாரியத்தின் தலைவராக M.S. போஜே கவுடா மற்றும் டீ வாரியத்தின் தலைவராக பிரபாத் குமார் பேசபரூப் (Prabhat Kamal Bezboruah) ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது.
4.சரியான, நம்பகமான வேலைவாய்ப்பு தரவுகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க நிதிஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.


உலகம்

1.ரவீந்திரநாத் தாகூரின் 156வது பிறந்தநாள் விழா, இந்திய அரசின் சார்பில் எகிப்தில் கொண்டாடப்பட்டது.
2.ஐ.நா.சபையின் துணை அமைப்பான UN – Habitat என்ற அமைப்பின் தலைமை பதவிக்கு இந்தியா தேர்வு பெற்றுள்ளது.ஏற்கனவே 1998 & 2007-ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம்மை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-5, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினா மடெனோவிச்சை (பிரான்ஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.இன்று உலக தொலைத்தொடர்பு தினம் (World Tele Communication Day).
உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.
2.இன்று உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day).
ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
3.வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்த நாள் 17 மே 1498.
4.நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்ட நாள் 17 மே 1792.
5.நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்ட நாள் 17 மே 1814.

 

– தென்னகம்.காம் செய்தி குழு