இந்தியா

1.ஹரியானா மாநில அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புனித யாத்திரை செல்வதற்கு ஏதுவாக தீர்த்த தரிசன யாத்திரை எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு முழுத்தொகையும்,வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 70% தொகையும் மானியமாக வழங்கப்படும்.
2.குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே , பரூச் (Bharuch) மற்றும் அங்கிலேஷ்வர் (Ankleshwar) நகரை இணைக்கும் வகையில் 1344 மீட்டர் நீளமுள்ள ஆசியாவின் மிக நீளமான கம்பி வட பாலத்தை [Cable Bridge] பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
3.வருடாந்திர வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி Krishi Unnati Mela , புதுடெல்லியில் மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை Indian Council of Agriculutral Research (ICAR) ஏற்பாடு செய்துள்ளது.
4.கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
5.மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் கடந்த மார்ச் 16-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக ஜாய் குமாரும் மற்றும் 7 அமைச்சர்கள்  பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா இவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
6.ஆந்திர மாநிலம் , விஜயவாடாவில் அமைந்துள்ள ஞானவரம் விமான நிலையத்தை –> நந்தமூரி தாரக ராமாராவ் – அமராவதி விமான நிலையம்  எனவும்,திருப்பதி விமான நிலையத்தை  –>  ஶ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம்  என பெயர் மாற்றம் செய்ய ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
7.பஞ்சாபின் 26வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அம்ரிந்தர் சிங் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.முதல்வருடன் சேர்த்து முன்னாள் கிரிக்கெட் விரர் நவ்ஜோத்சிங் சித்து உட்பட 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.நவ்ஜோத் சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் வி.பி.சிங் பட்நோர் இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


உலகம்

1.அமெரிக்க சுகாதார காப்பீட்டு ஆணையத்தின் தலைவராக இந்திய பெண் சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக தூக்க தினம் (World Sleep Day).
உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது. ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது. தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தூக்க மருந்து உலக சங்கம் 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
2.இரப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்ட நாள் 17 மார்ச் 1845.
3.கோல்டா மெயர் இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரான நாள் 17 மார்ச் 1969.
4.இலங்கை கிரிக்கெட் அணி முதன் முதலாக உலககோப்பை வென்ற நாள் 17 மார்ச் 1996.

 

– தென்னகம்.காம் செய்தி குழு