தமிழகம்

1.தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் முதலமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.சபரிமலை அருகே கேரள அரசுக்கு சொந்தமான சிறு வெள்ளி எஸ்டேட் பகுதியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
2.பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.உச்சநீதி மன்றத்துக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, கேரள மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி மோகன் ஷாந்தனா கவுடர், சத்தீஸ்கர் மாநில தலைமை நீதிபதி திபக் குப்தா, கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி அப்துல் நசீர் ஆகிய 5  நீதிபதிகள் நியமனத்துக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.


வர்த்தகம்

1.ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக “ஏர்பஸ் 320 நியோ” ரக விமானம் நேற்று இணைந்துள்ளது.இண்டிகோ மற்றும் கோ-ஏர் நிறுவனங்களை அடுத்து ஏ320 நியோ ரக விமானங்களை சேவையில் பயன்படுத்தும் மூன்றாவது நிறுவனம் ஏர்-இந்தியா ஆகும்.


உலகம்

1.அமெரிக்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து வரும் அய்ஜாஸ் அகமது சவுத்ரி(58), நியமிக்கப்பட்டுள்ளார்.
2.மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளராக உள்ள விகாஸ் ஸ்வரூப் கனடா நாட்டிற்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்த நாள் 17 பிப்ரவரி 1933.
2.விண்டோஸ் 2000 வெளியிடப்பட்ட நாள் 17 பிப்ரவரி 2000.

 

– தென்னகம்.காம் செய்தி குழு