current3

தமிழகம்

1.ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் 6 நபர்கள் கொண்ட குழுவை மதுரை ஐகோர்ட்டு கிளை நியமித்துள்ளது.

இந்தியா

1.மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.8 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு இணையதளம் வழியாக மட்டும் படிக்கும் வகையில் தற்போது வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3.வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணி தில்லியில் உள்ள வங்கியில் நேற்று முதல்  தொடங்கியது.
4.பெங்களூரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா விமான சோதனை மையத்தில் இருந்து நேற்று மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால்,உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  ரஸ்டம் 2  “TAPAS 201 (RUSTOM – II)” என்ற குண்டுவீசும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

உலகம்

1.இந்தியா – பங்களாதேஷ் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி 7வது Sampriti – 2016 , நவம்பர் 05  முதல் நவம்பர் 18 வரை டாக்காவில் நடைபெறுகிறது.
2.லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிபிசி சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி 4 இந்திய மொழிகள்(தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி) உள்பட 11 புதிய மொழிகளில் தனது சர்வதேச சேவையை விரைவில் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
3.சீனாவின் கணினி(சன்வே தாய்ஹுலைட்) உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் எட்டாவது முறையாக தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
4.அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக நவ்தேஜ் சர்னா பொறுப்பேற்றுக் கொண்டார்.
5.இன்று உலக குறைப்பிரசவ குழந்தை தினம் (World Prematurity Day).
உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
6.இன்று சர்வதேச மாணவர்கள் தினம் (International Students Day).
செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது. நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளையாட்டு

1.கோவையில் நடைபெற்ற 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் கேரள அணி 22-ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.