தமிழகம்

1.மதுரை விமான நிலையத்தில் வரும் ஏப்ரல் முதல் சரக்குப் போக்குவரத்து தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ் தெரிவித்துள்ளார்.
2.“வர்தா’ புயலால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பலத்த சேதத்தை சந்தித்துள்ளதையடுத்து, பூங்கா காலவரையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.சிவகாசி கவிதா நகரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி நம்மாழ்வார்(88), நேற்று காலமானார்.


இந்தியா

1.பாஜக இளைஞரணித் தலைவராக பூனம் மகாஜன் (36), நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் எஸ்.சி. பிரிவு தலைவராக எம்.பி. வினோத் சோன்ங்கர், எஸ்.டி. பிரிவு தலைவராக எம்.பி. ராம்விசார் நேதாம், விவசாயப் பிரிவு தலைவராக வீரேந்திர சிங், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக முன்னாள் எம்.பி. தாரா சிங் செளஹான் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2.மத்திய அரசின் “உஜாலா’ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 61,018 எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3.மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டுவோருக்கு 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா  மக்களவையில் நேற்று நிறைவேறியது.ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னர் விரைவில் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.புதுடெல்லியில் 2016-ம் ஆண்டிற்கான நீம்ரானா மாநாடு கடந்த டிசம்பர் 15-ம் தேதி நடைபெற்றது.
5.திருவனந்தபுரத்தில் டிசம்பர் 9ல் துவங்கிய 21வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 16ல் நிறைவுபெற்றது.நம் நாட்டில் மாநில அரசு நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா இது மட்டுமே ஆகும்.
6.மாலத்தீவில் டிசம்பர் 15 முதல் 28 வரை இந்தியா மாலத்தீவுகள் இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சி ” 7வது ஈகுவரின் ” நடைபெறுகிறது.


உலகம்

1.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குப்பெர்டினோ நகர மேயராக இந்திய – அமெரிக்கப் பெண்ணான சவிதா வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்நகரின் மேயராக பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
2.பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் புதிய செய்தித் தொடர்பாளராக ராணுவத் தளபதி ஆசிஃப் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் பிரெக்ஸிட், யூ டியூபர் உள்ளிட்ட 500 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.யூ டியூப் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் யூ டியூபர் என்ற அழைப்பது வழக்கமாக உள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையான “பிரிட்டன் எக்ஸிட்’ என்பதன் சுருக்கமே பிரெக்ஸிட் ஆகும்.
4.தென் அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் பணத்தாள் ” பொலிவார் ” செல்லாது என அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.மேலும் பொலிவார் ரூபாய் நோட்டுகளை ஒழித்து அவற்றின் மதிப்பு நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும் இதற்கான அறிவிப்பை  அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
5.அமெரிக்காவின் “ஃபோர்ப்ஸ்” பத்திரிகை 2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இரண்டாவது இடத்தையும்,உலகின் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மூன்றாவது இடத்தையும்,சீன அதிபர் ஜீ ஜின்பிங் நான்காவது இடத்தையும்,போப் பிரான்சிஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்த பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.


விளையாட்டு

1.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.இதில் 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில்  மதுரை மாணவர் செல்வபிரசன்னா வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் பிரீஸ்டைல் ரிலேயில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று முதல் விமானத்தில் ரைட் சகோதர்கள் பறந்த நாள் (Ist Flight Wright Brothers).
ரைட் சகோதர்கள் என்றழைக்கப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்கிற இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களே விமானத்தைக் கண்டுபிடித்த முன்னோடிகள். முதன்முதலில் டிசம்பர் 17 அன்று 1903ஆம் ஆண்டில் பூமிக்கு மேலே மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகளில் 120 அடி தூரம் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர்.
2.பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் (International Day to End Violence Against Sex Workers).
அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்காக டாக்டர் அன்னி தெளி மற்றும் பாலியல் தொழிலாளி அவுட் ரீச் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டில் இத்தினத்தை அமெரிக்காவில் கடைப்பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சின்னமாக சிவப்பு குடை அறிவிக்கப்பட்டது.
3.அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 1834.
4.கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றிய நாள் 17 டிசம்பர் 1961.
5.ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் போர்ட் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 1967.


சிறப்பு செய்திகள்

ஐக்கிய நாடுகள் கழகத்தின் இதர பிரதிநிதித்துவ அமைப்புகள்

ஐக்கிய நாடுகள் கழகத்தின் உணவு மற்றும் வேளாண்மை (FAO)-க் கழகம்.
சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA), வியன்னா, ஆஸ்திரியா
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) மனிடிரியல் – கனடா,
சர்வதேச ஆட்சிப் பணி ஆணையம், (ICSC) நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
பன்னாட்டு நீதிமன்றம் (ICJ) திஹேக், நெதர்லாந்து.
பன்னாட்டு முன்னேற்ற அமைப்பு (IDA) வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா, (உலகவங்கி குழு)
பன்னாட்டு நிதி- வேளாண்மை வளர்ச்சி வங்கி (IFDA) – ரோம், இத்தாலி
உலக தொழிலாளர்கள் அமைப்பு (ILO)ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
பன்னாட்டு கடல்வாழ் அமைப்பு (IMO) லண்டன், இங்கிலாந்து.
உலக நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா.
சர்வதேச பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (INSTRAW) சாந்தே டோமின்கே.
பன்னாட்டு தொலை தொடர்பு மையம் (ITO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
உலக வர்த்தகமையம் (ITC) – ஜெனீவா, சுவிட்சர்லாந்து (UNCTAD / WTO) (University of Peace)
ஐக்கிய நாடுகளின் கூட்டு செயல் திட்டம் – HIV / AIDS (UNAIDS) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
செய்தி சாதனமும் அமைதி நிறுவனமும் (University of Peace) பாரிஸ், பிரான்ஸ்.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலநிதி (UNICEF) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
ஐக்கிய நாடுகளின் வார்த்தக முன்னேற்ற மாநாடு (UNCTAO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச மருந்து கட்டுப்பாடு (Drug Control) திட்டம் (UNDCP) வியன்னா, ஆஸ்திரியா.
ஐக்கிய நாடுகளின் பெண்கள் நல முன்னேற்ற நிதி. (UNIFEM) – நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்டங்கள் (UNDP) நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பாரீஸ், பிரான்ஸ்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNEP) நைரோபி – கென்யா.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், (OHCHR) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
ஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற அமைப்பு  (UNIDO)  வியன்னா, ஆஸ்திரியா.
ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி- (UNFPA) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் (UNU) டோக்கியோ, ஜப்பான்.
ஐக்கிய நாடுகள் தொண்டர்கள் (UNU) பான், ஜெர்மனி.
பன்னாட்டு அஞ்சல் கழகம் (UPU) பெர்ன், சுவிட்சர்லாந்து.
பெண்கள் காப்பகம்- நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.
உலகவங்கி குழுமம் – வாஷிங்டன், அமெரிக்கா ஐக்கிய நாடு.
உலக உணவு திட்டம் (WFD) ரோம், இத்தாலி.
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
உலக அறிவுசார் பொருள் கழகம் (WIPO)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
உலக வானிலை அமைப்பு (WMO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
உலக சுற்றுலா அமைப்பு- மேட்ரிட்- ஸ்பெயின்.
உலக வர்த்தக மையம்- (WTO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.

 

– தென்னகம்.காம் செய்தி குழு