இந்தியா

1.சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நார் பகதூர் பண்டாரி நேற்று டெல்லி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.


உலகம்

1.யூனிசெப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான ‘சூப்பர் விமன்’ லில்லி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற முதல் பெண் மரியம் மிர்சாகனி உடல்நலக் குறைவால் காலமானார்.
3.பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52), ஒரு மணி நேரத்தில் 2682 புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 2220 புஷ் அப்ஸ் எடுத்த தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.


விளையாட்டு

1.இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய குரோஷியாவின் சிலிச்யை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவில் பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா, சிஇஓ ராகுல் ஜோரி, நிர்வாகக் குழுவில் இடம்பிடித்துள்ள டயானா எடுல்ஜி மற்றும் பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
3.லண்டனில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டியில் (World Para Athletics Championships) , இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச உலக நீதி தினம் (World Day for International Justice).
சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
2.1841 – முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு