இந்தியா

1.பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட Jal Sanchay நீர் மேலாண்மை திட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட விருது (MGNREGP) வழங்கப்பட்டுள்ளது.
2.70 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை மீண்டும் வெளிவந்துள்ளது.பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பவனில், குடியரசுத் துணைத் தலைவர் இதனை வெளியிட்டுள்ளார்.


உலகம்

1.பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் இணைந்து உருவாக்கியுள்ள Moblise Your City திட்டத்தின் கீழ் , பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுவை கட்டுப்படுத்த நாக்பூர் , கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு 3.5 மில்லியன் யுரோஸ் நிதியுதவி அளித்துள்ளன.இந்த திட்டத்தில் நிதியுதவி பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும்.
2.இந்தியா ஆஸ்திரேலியா கடற்படைகள் இணைந்து மேற்கோளும் பயிற்சி AUSINDEX – 2017, ஆஸ்திரேலியாவில் ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை நடைபெறுகிறது.
3.சீனாவின் ஒருங்கினைந்த பகுதிதான் தைவான் என்ற கொள்கையை ஏற்று, தைவான் அரசுடன் கொண்டிருந்த தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக பனாமா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா மற்றும் திவ்யா தஹால் ஜோடி வெண்கலம் வென்றுள்ளனர்.
2.அஜர்பைஜன் நாட்டின் கபாலா நகரில் நடைபெற்ற ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் , கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியுவின் ஹீனா சித்து – ஜிது ராய் ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
3.தேசிய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில், இந்தியாவின் சுனில் செத்ரி 4 வது இடத்தில் உள்ளார்.அவர் 94 போட்டிகளில் 54 கோல் அடித்துள்ளார்.போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.அவர் 139 போட்டிகளில் 73 கோல் அடித்துள்ளார்.அர்ஜென்டினாவின் மெஸ்சி இரண்டாவது இடத்தில் உள்ளார்.அவர் 118 போட்டிகளில் 58 கோல் அடித்துள்ளார்.அமெரிக்க வீரர் கிளையன்ட் டெம்ப்சே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.அவர் 134 போட்டிகளில் 56 கோல் அடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் (World Day to Combat Desertification and Draught).
மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
2.1967 – சீனா தனது முதலாவது அதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு