Current-Affairs-Updates

தமிழகம்

1.இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  வாஞ்சிநாதன் இறந்த நாள் 17 ஜூன் 1911.வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.

இந்தியா

1.2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் விருது பெற தமிழ் எழுத்தாளர்கள் குழ.கதிரேசன், லட்சுமி சரவணகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யுவ விருது பெற லட்சுமி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ நாவல் தேர்வாகியுள்ளது.பால விருது பெற எழுத்தாளர் குழ.கதிரேசன் தேர்வாகி உள்ளார்.இந்த விருதுகளை பெறுவோருக்கு தலா ஒரு தாமிர பட்டயம், ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவை வழங்கப்படும்.
2.இன்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூன் 1973.

உலகம்

1.இன்று அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூன் 1980.
2.ஆஸ்திரேலியா துடுப்பாளர்  ஷேன் வாட்சன் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூன் 1981.
3.17 ஜூன் 1987ல்  மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.