தமிழகம்

1.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய “பினாகின்” செயலியை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
2.தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சில் கோவை மாநகராட்சியை திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகரமாக அறிவித்துள்ளது.


இந்தியா

1.ஜனவரி 9-10-ம் தேதி 20வது தேசிய மின்னணு ஆட்சி மாநாடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
2.உத்திர பிரதேசத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முலாயம் சிங் – அகிலேஷ் யாதவ் இடையே சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற போட்டி நிலவி வந்தது.இந்நிலையில் அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
3.இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்படும் ரொக்கத்தின் அளவை ரூ.4,500-இலிருந்து ரூ.10 ஆயிரமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.மேலும் வங்கிகளிலிருந்து வாரந்தோறும் எடுக்கும் தொகையின் அளவினை(வாரமொன்றுக்கு ரூ.24 ஆயிரம்) ரிசர்வ் வங்கி அதிகரிக்கவில்லை.நடப்புக் கணக்குகளிலிருந்து வாரமொன்றுக்கு எடுக்கக்கூடிய தொகையின் அளவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.


உலகம்

1.குவாடர் துறைமுகத்தையும், சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதையோடு தொடர்புடைய கடல்வழி பாதைகளை பாதுகாப்பதற்கும் பாகிஸ்தான் கடற்படைக்கு Dasht & Zhob என்ற இரண்டு கப்பல்களை சீனா வழங்கியுள்ளது.
2.உலக பொருளாதார மையத்தின் 47வது ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் ஜனவரி 17 முதல் ஜனவரி 20 வரை நடைபெறுகிறது.
3.ஒபாமாவின் கேர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பதிலாக ‘அனைவருக்குமான மருத்துவ காப்பீடு’ திட்டத்தை உறுதி செய்ய விருப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் கோவ் லீ (75 கிலோ), சென் ஸியெக்ஸியா (48 கிலோ), லியூ சுன்காங் (69) ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதனால் அவர்களுடைய பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.ஒரு நாட்டைச் சேர்ந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தால் அந்த நாட்டுக்கு ஓர் ஆண்டு தடை விதிப்பது என உலக பளுதூக்குதல் சம்மேளனம் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.அதன்படி இப்போது சீனா ஒரு வருடம் தடையை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும், நவம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் சீனா பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2.பிரிட்டனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான, பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஸ் போட்டியில், முதல் மூன்று இடங்களையும் (வேலவன் செந்தில்குமார்,அபய்சிங்,ஆதித்யா ராகவன்) இந்தியர்களே வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.
3.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்டா,போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஹங்கேரியின் டிமியா பாபோஸ் – அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா) ஜோடி, இந்தியாவின் சானியா மிர்சா – பார்போரா ஸ்டிரைகோவா (செக் குடியரசு) ஜோடியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.


இன்றைய தினம்

1.இன்று பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த தினம்.
பெஞ்சமின் பிராங்க்ளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தார். மின்னலில்கூட மின்சாரம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். மின்சாரம், இடி, மின்னல் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடியையும் (Bifocal Glasses) கண்டுபிடித்தார். அமெரிக்காச் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் பெஞ்சமின் ஆவார்.
2.இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த தினம். இவர் பிறந்த தேதி 17 ஜனவரி 1917.
3.17 ஜனவரி 1917-ம் ஆண்டு கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு