current-affairs

தமிழகம்

1.பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 1997.
2.இன்று திராவிடர் கழகத் தந்தை  ஈ. வெ. ரா. பெரியார் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  17 செப்டம்பர் 1879.
3.இன்று  திரு.வி.கல்யாணசுந்தரம் இறந்த தினம்.இவர் இறந்த தேதி 17 செப்டம்பர் 1953.
4.தமிழகத்தில் புதிதாக ஜமீன் கயத்தார்,ஸ்ரீமுஷ்ணம்,சிங்கம்புணரி,ஆண்டிமடம், கூத்தாநல்லூர் ஆகிய 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
5.வண்டலூர் பூங்காவிற்கு திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து 4 ரியா பறவைகள், 6 வராக மான்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கு பதிலாக வண்டலூர் பூங்காவில் இருந்து 4 வெள்ளை மயில்கள்,4 கட்ட உடல் மலைப்பாம்புகள் திருவனந்தபுரம் பூங்காவிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா

1.இன்று உலக கடற்கரை தூய்மை தினம்.
2.இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2004.
3.இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 செப்டம்பர் 1950.

உலகம்

1.வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்த நாள் 17 செப்டம்பர் 1789.
2.ஜிம்பாப்வே அதிகாரிகள் வரும் அக்டோபர் மாதம் அமெரிக்க டாலருக்கு இணையான பாண்ட் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
3.பிரிட்டன் மருத்துவர்கள் முதல்முறையாக ரோபோ மூலமாக  ஒருவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.ஆக்ஸ்போர்டு ஜான் ரட்க்ளிஃப் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

விளையாட்டு

1.இந்தியா-ஸ்பெயின் அணிகள் இடையிலான உலக குரூப் பிளே ஆஃப் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தில்லியில் நேற்று தொடங்கியது.