இந்தியா

1.Demonetisation and Black Money என்ற புத்தகத்தை சி.ராம் மனோகர் ரெட்டி எழுதியுள்ளார்.
2.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிடம் தொழில்நுட்பத்தைப் பெற்று சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், தோஷிபா கார்ப்பரேஷன், டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகிய மூன்று ஜப்பான் நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளன.
3.ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.இந்த வெற்றி மூலம் ஃபருக் அப்துல்லா மூன்றவாது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த தேர்தலில் 7.13% ஓட்டுகளே மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.
4.ஆந்திரா மாநில அரசு நடப்பு கல்வியாண்டு முதல் 5000 பள்ளிகளில், மாணவர்கள் தங்கள் தாய்க்கு பாதபூஜை செய்யும் விழா நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
5.தெலுங்கானாவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கியுள்ள முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 4% லிருந்து 12% ஆகவும் ,பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 4% லிருந்து 10% ஆக உயர்த்தும் மசோதா நிறைவேறியுள்ளது.
6.ஆந்திர மாநிலம், அமராவதியில் ஐனவோலு கிராமத்தில் 100 கோடி செலவில் சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு பூங்கா அமைக்க அம் மாநில முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.இதில் 126 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படவுள்ளது.
7.கர்நாடகா அரசின் சார்பில் துவங்கப்பட உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆப் காமர்ஸ் என்ற கல்வி நிலையத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டியுள்ளார்.


விளையாட்டு

1.சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணீத் , சக இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார்.பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனையான தாய் சூ , ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக ஹீமோபீலியா தினம் (World Hemophilia Day).
மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்க்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.அப்போலோ-13 விண்கலம் பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பிய நாள் 17 ஏப்ரல் 1970.

– தென்னகம்.காம் செய்தி குழு