தமிழகம்

1.சென்னை திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 14-ஆம் தேதி  தொடங்கப்பட்டது.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.


இந்தியா

1.காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 101 நாடுகளைச் சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.உலகமே திரும்பிப் பார்க்கும் இந்த சர்வதேச மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது.
2.எவரெஸ்ட் சிகரத்தில் எட்டு தடவை ஏறி நேபாளத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை லாக்பா ஷெர்பா (44), புதிய சாதனை படைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கிய நாள் 16 மே 1969.
2.பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்ட நாள் 16 மே 1975.
3.ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆன நாள் 16 மே 1975.
4.இன்று மலேசியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு