இந்தியா

1.மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2.நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா கடந்த மார்ச் 14-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துகள் எதிரி சொத்துகள் என நிர்ணயிக்கப்படுள்ளது.இந்த மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.இந்தியாவின் முதல் ரயில் ஆம்புலன்ஸ் சேவை மத்திய ரயில்வே சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மும்பையில், கல்யாண் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
4.மெட்ராஸ் IIT யின் நிர்வாக குழு தலைவராக மகேந்திரா & மகேந்திரா குழுமத்தின் செயல் இயக்குநர் பவன் கோயாங்கோவை மீண்டும் நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.பவன் கோயாங்கோ 2014 ஜூன் முதல் இப்பதவியில் இருந்து வருகின்றார். தற்போது 2020 ஜூன் வரை தொடர்ந்து இப்பதவி வகிப்பார்.


உலகம்

1.மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது.இதில்  உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரம் இரண்டாவது இடத்தையும்,நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம் மூன்றாவது இடத்தையும்,ஜெர்மனியின் முனிச் நகரம் நான்காவது இடத்தையும்,கனடாவின் வான்கோவர் நகரம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட [ International Film Festival and Awards of Australia ] விழாவில் , SARBJIT படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுளளது.


விளையாட்டு

1.ஜூன் 2017-ல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ICC பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதராக சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கமிட்டி நியமித்துள்ளது


சிறப்பு செய்திகள்

1.The Wrong Turn : Love and Betrayal in the Time of Netaji என்ற புத்தகத்தை சஞ்சய் சோப்ரா & நமிதா ராய் கோஸ் ஆகியோர் எழுத்தியுள்ளனர்.
2.From Inside the Steel Frame : The Memoirs of an Administrator என்ற புத்தகத்தை அசோக் பாண்டே எழுதியுள்ளார்.


இன்றைய தினம்

1.முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்ட (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது) நாள் 16 மார்ச் 1942.
2.ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டு சென்ற விண்கலம், ஏவப்பட்ட நாள் 16 மார்ச் 1966.
3.மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்த நாள் 16 மார்ச் 2006.

 

– தென்னகம்.காம் செய்தி குழு