இந்தியா

1.ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ள நேத்ரா கண்காணிப்பு விமானம்  கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கிய இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படையில் சேர்த்து கொள்ளப்பட்டது.விஞ்ஞானி ராஜ்லட்சுமி தலைமையிலான குழுவினர் இதை வடிவமைத்தனர்.
2.பெங்களூரில் எலகங்கா விமானப்படை தளத்தில் 11-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
3.பிரதமரின் வீட்டு வசதித் திட்ட இணையதளப் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் படங்களை நீக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


உலகம்

1.ஐ.நா. பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. அமைதிப் படையின் புதிய தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸை (56) நியமித்துள்ளார்.தற்போது பதவி வகித்து வரும் ஹெர்வ் லாட்சூஸ், வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறுவதையொட்டி ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸை நியமித்துள்ளார்.
2.மூத்த பத்திரிகையாளர் டி.வி. பரசுராம் (93), கடந்த 14-ஆம் தேதி அமெரிக்காவில் காலமானார்.


விளையாட்டு

1.2017-ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கும் விழா ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்றது.இதில் சிறந்த விளையாட்டு வீரர் விருது தடகள வீரர் உசேன் போல்ட்க்கும்,சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பில்ஸ்ம் வென்றுள்ளனர்.


இன்றைய தினம்

1.வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்ற நாள் 16 பிப்ரவரி 1937.
2.80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்ற நாள் 16 பிப்ரவரி 1947.
3.எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 16 பிப்ரவரி 1961.
4.ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 1985.
5.2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2007.

– தென்னகம்.காம் செய்தி குழு