current2

தமிழகம்

1.சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக மாவட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

1.காரக்பூர் ஐ.ஐ.டி.யினை சேர்ந்த புவி அறிவியல் மற்றும் சமூகவியல் துறை விஞ்ஞானிகள் அடங்கிய குழுவானது, ஒடிசாவில் அமைந்துள்ள கோனார்க் சூரிய கோவில் பகுதி அருகே புராணகாலத்தினை சேர்ந்த சந்திரபாகா என்ற ஆறு இருந்ததற்கான சான்றுகளை கண்டுபிடித்து உள்ளனர்.
2.புதுடெல்லியில் நவம்பர் 08 முதல்  நவம்பர் 10 வரை மூலிகை மருந்துகளின் சர்வதேச ஒழுங்குமுறை கூட்டமைப்பின் 9வது வருடாந்திர மாநாடு நடைப்பெற்றது.
3.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அருணாச்சல பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களான Tirap, Changlang & Longding ஆகியவற்றில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமலாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.மேலும் இந்த மூன்று மாவட்டங்களும் சிறப்பு ஆயுதப்படை சட்டம் பிரிவு 3ன் படி அமைதியற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
4.புனேவில் நவம்பர் 15 முதல் 27 வரை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி Hand in Hand — 2016 நடைபெறுகிறது.
5.இந்தியா முழுவதும் ஏடிஎம் இயந்திரங்களை மறுசீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா தலைமையில் 8 பேர் கொண்ட தனிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
6.மத்திய பிரதேசம் வழங்கும்  2015 – 16ம் ஆண்டுக்கு காளிதாஸ் சம்மான் விருது  ராஜ் பிசாரியாவுக்கும்,2016 -17ம் ஆண்டுக்கான விருது பன்ஷி கவுல்க்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

உலகம்

1.சீனாவைச் சேர்ந்த Meng Hongwei இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின்(International Criminal Police Organization) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.சீனாவிடம் இருந்து 2 நீர்மூழ்கி கப்பல்களை வங்கதேசம் வாங்கியுள்ளது.இந்த நீர்மூழ்கி கப்பல்  வங்கதேசம் கப்பல்படையில் முதன்முறையாக சேர்க்கப்பட உள்ளது.இந்த கப்பல்களுக்கு  பிஎன்ஸ் நபஜத்ரா மற்றும் பிஎன்ஸ் ஜாய்ஜத்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
3.இன்று சர்வதேச சகிப்புத் தன்மை தினம் (International Day for Tolerance).
யுனெஸ்கோ அமைப்பு தனது 50ஆவது ஆண்டு விழாவை 1995ஆம் ஆண்டில் கொண்டாடியது. யுனெஸ்கோ தனது சகிப்புத் தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களை தயாரித்து நவம்பர் 16 இல் வெளியிட்டது. உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.
4.இன்று உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் (World Chronic Obstructive Pulmonary Disease Day).
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் சுமார் 210 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு கணித்துள்ளது. புகையிலை, ரசாயனப் புகை, காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் 2030ஆம் ஆண்டில் உலகளவில் இந்த நோயால் அதிக மரணம் ஏற்படப் போகிறது என எச்சரித்துள்ளது. இந்நோய் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்த 2002ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.