தமிழகம்

1.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு நாய் இனப்பெருக்க மையத்தை 2 மாதங்களில் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .


இந்தியா

1.நிதி ஆயோக் அமைப்பு நுகர்வோர் மற்றும் வணிகர்கள் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.நுகர்வோர்களுக்காக ” லக்கி கிரஹாக் யோஹஜனா ” வணிகர்களுக்காக ” திகி தான் வியாபாரி யோஜனா ” என்ற பரிசு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.லக்கி கிரஹாக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் கிறிஸ்துமஸ் முதல், 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும், 7 ஆயிரம் பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும் வழங்கப்பட உள்ளன.திகி தான் வியாபாரி யோஜனா திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14 வரை வாரந்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளன.மேற்கண்ட அறிவிப்பை நிடி ஆயோக் அமைப்பின் சி.இ.ஒ., அமிதாப் காந்த் வெளியிட்டுள்ளார்.
2.பிரபல ஹிந்தி திரைப்பட கலைஞர்கள் ஷாகித் கபூர் மற்றும் சோனம் கபூர் ஆகியோருக்கு விலங்குகள் நல ஆதரவு அமைப்பான Beta India வழங்கும் 2016ம் ஆண்டின் ” தீவிர சைவ உணவாளர்கள் ” விருது ( Hottest Vegetarians of 2016 ) வழங்கப்படுகிறது.
3.ஆசியா பசுபிக் நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி 6வது மாநாடு புதுடெல்லியில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறுகிறது.
4.இந்தியா மற்றும் ரஷ்யா கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும்   9வது இந்திரா நேவி , பயிற்சி விசாகப்பட்டினத்தை மையமாக கொண்டு வங்க கடலில் நடைபெறுகிறது.இந்த பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.டிசம்பர் 14 முதல் 18 வரை Harbour Phase என்றும் டிசம்பர் 19 முதல் 21 வரை Sea Phase என்றும் அழைக்கப்படுகிறது.
5.ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அமைப்பு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.தற்போது யுனிசெப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
6.நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றவும்,புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும்  உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தேசிய நெடுஞ்சாலைக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


உலகம்

1.மலேசியாவின் புதிய அரசராக சுல்தான் முகமது (47) அரியணை ஏறியுள்ளார்.இவர் மலேஷிய நாட்டின், 15வது மன்னராக பதவியேற்றுக்கொண்டார்.
2.ஜப்பான் நாடு சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கழிவுகளை சேகரிக்க   H – II B ராக்கெட் மூலம் Kounotori என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.Kounotori என்றால் ஜப்பானிய மொழியில் கொக்கு / நாரை ( Stork ) என பொருளாகும்.


விளையாட்டு

1.ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் மற்றும் சீன ஓபன் பேட்மிண்டன் கோப்பை வென்றது , உலக சூப்பர் சீரிஷ் போட்டிக்கு தகுதி பெற்றது , தரவரிசையில் 12வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியது ஆகிய காரணங்களுக்காக சர்வதேச பேட்மிண்டன் அமைப்பு P.V. சிந்துவிற்கு Most Improved Player of the Year award ஐ வழங்கி கவரவித்துள்ளது.
2.பெங்களூருவில் நடைபெற்ற 11வது உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்சிப் போட்டியில் (150-Up format) இந்தியாவின் பங்கஜ் அத்வானி , சிங்கப்பூரின் பீட்டர் ஜில்கிரிஷ்டை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.இது இவர் வெல்லும் 16வது பட்டமாகும்.
3.உலகின் சிறந்த கால்பந்து வீரருக்குரிய ” பாலோன் டி ” தங்கப்பந்து விருது, போர்சுகல் அணியின் கேப்டன் ‘ கிறிஸ்டியானோ ரொனால்டோ வுக்கு ‘ 4வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை  2008, 2013, 2014, 2016 ஆம் ஆண்டு இவர் பெற்றுள்ளார்.அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012 , 2015 ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார்


இன்றைய தினம்

1.வங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் 16 டிசம்பர் 1971.
2.இன்று கசக்கஸ்தான் நாட்டில் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3.ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்த நாள் 16 டிசம்பர் 1707.

 

– தென்னகம்.காம் செய்தி குழு