இந்தியா

1.சூரிய மின்சக்தியை பயன்படுத்தி இயங்கும் ரெயில் பெட்டிகளை டில்லியில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.சோலார் ரெயில் பெட்டிகள் கொண்டஇந்த ரயில் ஆனது முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா – ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.சூரியனின் மேற்பரப்பில் 74,560 மைல் அகலம் கொண்ட கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டுபிடித்துள்ளது.அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை 7-5.6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி கார்பின் முகுருசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது.
2.1769 – சான்டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.
3.1955 – டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.
4.2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு