இந்தியா

1.உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லவ் ராஜ் சிங், எவரெஸ்ட் சிகரத்தை ஆறு முறை ஏறிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
2.மத்திய சட்ட அமைச்சகத்தின் சார்பில் TELE – LAW என்ற பெயரில் காணொளி காட்சி மூலம் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
3.நாடு முழுவதும் சிறப்பான சுகாதார வசதியை உருவாக்குவதற்கான முன்னோடியாக , தேர்வு செய்யப்பட்ட மூன்று மாநிலங்களில் அனைத்து வசதிகளையும் உருவாக்குவதற்கு SATH(Sustainable Action for Transforming Human capital) என்ற திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது.
4.தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரியாக ( MD and CEO ) விக்ரம் லிமாயே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்போது இவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக குழு உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். அதில் இருந்து விடுபட்ட பின் மேற்கண்ட பதவியை ஏற்றுகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.புகையிலை பயிரிடுவதை 2020ம் ஆண்டோடு நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.தென்கொரியாவில் நடைபெற்ற U20 உலக கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து , வெனிசுலாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.1911 – ஐபிஎம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு