தமிழகம்

1. கூடங்குளம் 2வது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
2.சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் மொத்தமாக, கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 1,544 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த அளவு 9,723 மில்லியன் கன அடி நீர் என இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏறக்குறைய 8 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் குறைவாக உள்ளது. இது இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே போதுமானது.


இந்தியா

1.நாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2.சமூக வலைதளங்களில் தங்களது குறைகளை வெளியிடும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரித்துள்ளார்.


உலகம்

1.பூமியில் அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க வேண்டுமானால் அதற்கு குறைந்தபட்சம் 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2.கியூபா மீதான 20 ஆண்டு பழமையான குடியேற்ற கொள்கையிலும் அதிபர் ஒபாமா மாற்றம் கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க எல்லை வழியாக சட்ட விரோதமாக நுழை யும் கியூபா மக்களுக்கு சட்டப்படி குடியுரிமை வழங்கப்பட்ட நடைமுறை ரத்தாகிறது.
3.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20-ம் தேதியன்று பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்வை ட்விட்டர் நிறுவனம் நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.
4.கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.


விளையாட்டு

1.கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது.
2.ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
3.இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 350 ரன்கள் என்ற  இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
4.புதுடெல்லியில் உள்ள சிரி போர்ட் மைதானத்தில் 2–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) தொடரின் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.இறுதிப் போட்டியில் 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை தோற்கடித்து  சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1761: இந்தியாவின் பாண்டிச்சேரி பிரதேசத்தை பிரான்ஸிடமிருந்து பிரிட்டன் கைப்பற்றியது.
1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 விண்கலங்களின் விண்வெளி நிபுணர்கள் விண்வெளியில் வைத்து  இடம்மாறினர். இத்தகைய நிகழ்வு இடம்பெற்றது இதுவே முதல்முறை.

 

– தென்னகம்.காம் செய்தி குழு