current-affairs

இந்தியா

1.இன்று இந்திய கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 16 செப்டம்பர் 1916.
2.இந்தியா – அமெரிக்கா பொருளாதார உச்சி மாநாடு புதுடெல்லியில் செப்டம்பர் 14 மற்றும் செப்டம்பர் 15 ல் நடைபெற்றது.இந்த மாநாட்டை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா தொடங்கி வைத்தார்.
3.அஞ்சல் துறை பற்றிய குறைகளை தெரிவிக்க 1924 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த சேவையில் இந்தி, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது.
4.உலக அளவில் பயங்கரவாதத்தால் கடந்த 2015ம் ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் உள்ளது.ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும்,பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.இதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் 2015ம் ஆண்டு 43% தாக்குதல்கள் அதாவது 791 தாக்குதல்கள் நடந்துள்ளது.உலகளவில் 2015ம் ஆண்டு 11,774 தாக்குதல்கள் நடந்துள்ளது.

உலகம்

1.இன்று உலக ஓசோன் தினம்(World Ozone Day).

பூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இலண்டனில் மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 1852.
3.73வது சர்வதேச வெனிஸ் திரைப்பட விழாவில் பிலிப்பைன்ஸை சேர்ந்த  இயக்குநர் லே டையஸால் இயக்கப்பட்ட “த வுமென் கு லெப்ட்” என்ற திரைப்படம் “தங்க சிங்க விருது” பெற்றுள்ளது.சிறந்த நடிகருக்கான விருது ஆஸ்கர் மார்டின்ஸூக்கும், சிறந்த நடிகைக்கான விருது “லா லா லாண்ட்” (La La Land) படத்திற்காக எம்மா ஸ்டோனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
4.உலக அளவில் அதிக அளவில் சம்பளம் ஈட்டும் சின்னத்திரை நடிகைகளில் அமெரிக்காவின் சோபியா வெர்கரா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதில் இந்தியாவின் பிரியங்கா சோப்ராவும் இந்த பட்டியலில் இடப்பெற்றுள்ளார்.அவர் குவாண்டிகோ” என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்ததற்காக இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்ற முதல் சின்னத்திரை நடிகையும் பிரியங்கா சோப்ரா தான்.இந்த பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.