இந்தியா

1.ஜெர்மனி தலைமையில் G 20 நாடுகளின் கட்டமைப்பு பணிக்குழு மூன்றாவது கூட்டம் வாரணாசியில் மார்ச் 28 & மார்ச் 29ல் நடைபெற்றது .
2.இந்திய அரசின் சார்பில் சட்ட மாமேதை , அண்ணல் அம்பேத்கரின் 126வது பிறந்த தின விழா ஐ.நா.சபையில் கொண்டாடப்பட்டது.


உலகம்

1.நேபாளம், சீனா நாடுகளுக்கு இடையே முதல் கூட்டு ராணுவ பயிற்சி(சகர்மாதா நட்பு) ஏப்ரல் 16-ம் தேதி காத்மண்டு நகரில் தொடங்குகிறது.சகர்மாதா என்பது எவரெஸ்ட் சிகரத்தின் நேபாள பெயர் ஆகும்.
2.“அனைத்து வெடிகுண்டுகளின் தாய்” எனப்படும் அணுஆயுதமில்லா மிகப்பெரிய குண்டை MC – 130 அமெரிக்க விமானம், ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கர் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் வீசி உள்ளது.அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை ரஷ்யாவின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
3.எண்முறை பொருளாதாரம் பற்றி G 20 நாடுகளின் எண்முறை அமைச்சர்களின் கூட்டம் ஜெர்மனியின் Dusseldorf நகரில் நடைபெற்று முடிந்துள்ளது.


இன்றைய தினம்

1.இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 1853.
2.இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமான நாள் 16 ஏப்ரல் 1885.
3.முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமான நாள் 16 ஏப்ரல் 1966.

 

– தென்னகம்.காம் செய்தி குழு