Current-Affair-Logo

தமிழகம்

1.தமிழில் பிரபல எழுத்தாளரான  அசோகமித்திரனின் புகழ்பெற்ற மூன்று படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. “பாவம் டல்பதடோ’ என்ற நாவல் “The Ghost of Meenambakkam”  என்ற பெயரிலும்,”இருட்டிலிருந்து வெளிச்சம்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு பகுதி “Fourteen years with Boss”  என்ற பெயரிலும்,பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு “Still bleeding from the wound” என்ற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதனை பென்குயின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா

1.ராணுவ வீரர் ஹங்பன் தாதாவுக்கு அசோக சக்ரா விருதை சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி வீரமரணமடைந்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.ராணுவத்தினருக்கு 81 வீரதீர விருதுகளையும்  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
2.பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பில் இருந்து, எந்த நிறுவனத்தின் செல்லிடப் பேசி, மற்றும் தரைவழி இணைப்புகளுக்கு நேற்று  இலவசமாக அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.இதே வசதியை ஞாயிற்றுக்கிழமை தோறும் பெறலாம் என்று மனோஜ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.இந்த வசதி உள்நாட்டு அழைப்புகளுக்கு மட்டும் பொருந்தும் .
3.இன்று தில்லியின் 7வது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 16 ஆகஸ்டு 1968.

உலகம்

1.உலகிலேயே முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் இன்று  செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக் கோளின் உதவியுடன் பரிமாறப்படும் தகவல்களை உலகில் யாரும் திருட முடியாது என நம்பப்படுகிறது. யோகன் 32 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் செலுத்தப்பட்டுள்ளது.இந்த செயற்கைக் கோள் 600-கிலோவிற்கும் அதிகமான எடை கொண்டது. இது 90 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும்.
2.லண்டனை சேர்ந்த ‘அட்கீன்ஸ்’ சுற்றுச்சூழல் விருது சென்னை நகரின் கடல் அரிப்பை அற்புதமான முறையில் பதிவு செய்ததற்காக, கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.