Current-Affairs-Updates

தமிழகம்

1.உலக வானிலை ஆய்வு மைய நிறுவனத்தின் பேராசிரியர் “டாக்டர் வில்ஹோ வைசலா விருது’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஸ்பெயினில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்  இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி என்ற பெருமையை  இவர் பெற்றுள்ளார்.
2.ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் நினைவிடம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
3.பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள் 16 அக்டோபர் 1799.

இந்தியா

1.பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு கோவா மாநிலம் பனாஜி நகரில் நேற்று தொடங்கியது.பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும்

உலகம்

1.நாசா விஞ்ஞானிகள் பூமியை சுற்றி வரும் நிலவு 81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பொலிவு அடைவதாக தெரிவித்துள்ளனர்.
2.காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வெளியேறி உள்ளது.மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு பாரபட்சமாக நடந்து கொள்வதாலும்,நாட்டின் உள் விவகாரங்களில் அந்த அமைப்பு தலையிடுவதாலும்,இந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.
3.பிரபல சமூகவலைத்தளமான முகநூலின் ‘மென்பொருள் குறைகளை கண்டறியும் திட்டத்தின்’ கீழ், அதிக அளவில் பரிசு பணத்தை பெறுவதில், இந்த ஆண்டு இந்திய ‘ஹேக்கர்கள்’ முதலிடம் பிடித்துள்ளனர்.இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் மெக்சிகோவும் உள்ளன.
4.ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குள் காணப்படும் துறவற சபைகளில் மிகவும் பிரபலமான ஒன்றான இயேசு சபையினர் தங்களுடைய உலக தலைவரை , முதல்முறையாக ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.வெனிசுவேலாவை சேர்ந்த பாதிரியார் அல்வாரோ சோசா அபாஸ்கல்லை தேர்வு செய்துள்ளனர்.
5.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தற்போது உயிரோடு இருப்பவர்களில், மிக நீண்டகாலம் மன்னராக / ராணியாக உள்ளவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
6.இன்று உலக உணவு தினம் (World Food Day).
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்சினை, பசி, வறுமைக்கு எதிராக போராடுவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். உணவு இருந்தும் அது கிடைக்காமல் பலர் இறப்பதைக் கண்டு ஐ.நா. சபை வேதனையடைந்தது. மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
7.இன்று மயக்கவியல் நாள் (World Anaesthesia Day).
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் நாள் உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) என அனுசரிக்கப்படுகிறது.1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு செய்திகள்

புயலை எந்த எந்த நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர்:

இந்தியா – புயல்
ஆஸ்திரேலியா – வில்லி வில்லி
சீனா, ஜப்பான் – தைபூன்
அரேபிய – அரிக்கேன்

வெப்பக்காற்று வீசும் நாடுகள்:

ஃபிரிக் பீல்டர் – ஆஸ்திரேலியா
சின்னூக் – அமெரிக்கா
ஃபான் – வடக்கு இத்தாலி
சிராக்கோ – சகாரா பாலைவனம்
லூ – வட இந்தியா

குளிர் காற்று வீசும் நாடுகள்:

ஆர்மத்தான் – மத்திய ஆப்பிரிக்கா
மிஸ்ட்ரல் – ஆல்ப்ஸ் மலை (இத்தாலி)
புர்கா – ரஷ்யா
நார்ட் – மெக்சிக்கோ வளைகுடா
ஃபாம்பெரோ – அர்ஜென்டினா

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

21.இன்று திருவாரூர் மாவட்டம்.

திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் எனவே முதலில் ஆரூர் என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.