இந்தியா

1.பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து 80 வயதான மூத்த குடிமக்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.
2.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஃப்ளோரன்ஸ்-க்கு நைட்டிங் கேல் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.கன்ஜம் மாவட்டத்தில் உள்ள குகுடகாந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ண குமாரி 18 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியதாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.மே 12-ம் தேதி உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
3.உலகின் அனைத்து நாடுகளிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் மிகவும் பிசியான விமான நிலையமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மும்பை விமான நிலையம் ஒரே ஒரு ரன்வேயை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.லண்டன் காட்விக் விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி மும்பை விமான நிலையம் இந்த சாதனையை புரிந்துள்ளது.


உலகம்

1.பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா [Vinay Mohan Kwatra] நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது பிரதமரின் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
2.பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவல் மக்ரான் (39), நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபராக பதவியேற்றவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா,65 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் 69 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இந்தியாவின் ரிது போகத் 48 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச குடும்ப தினம் (International Day of Families).
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.
2.உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்ற நாள் 15 மே 1718.
3.சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்ட நாள் 15 மே 1958.
4.சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்ட நாள் 15 மே 1960.

 

– தென்னகம்.காம் செய்தி குழு