current3

தமிழகம்

1.அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் தேர்தலை தள்ளிவைத்து தேர்தல் கமிஷன்.

இந்தியா

1.ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் எதிரிகளின் இலக்கை அணு ஆயுதம் தாங்கி சென்று இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட சூப்பர் சோனிக் பிரித்வி -2 ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.அணு ஆயுதத்தை சுமந்து சென்று 350 கி.மீ. இலக்கை தாக்கும் சக்தி கொண்டது.இந்த ஏவுகணை 500கிலோ முதல் 1000கிலோ எடை கொண்டது.

உலகம்

1.சர்வதேச குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
2.உலகின் மிகவும் வயதான சியாமி இனத்தைச் சேர்ந்த பூனை ஸ்கூட்டர் அதன் உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்துள்ளது.அதன் வயது 30 ஆகும்.