இந்தியா

1.மத்திய நீர்வள கமிசன் புதிய தலைவராக நரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.மே 09 முதல் மே 12 வரை ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மே.வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் இணைந்த யானைகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளது.
3.ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய துணை ஆளுநராக B.P. கனுங்கோ ( B.P. Kanungo ) நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும்.தற்போது துணை ஆளுநராக பதவி வகித்து வரும் R. காந்தி, ஏப்ரல் 03ல் ஓய்வு பெறுவதையொட்டி B.P. கனுங்கோ புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.கோவா மாநில முதல்வராக பாஜகாவைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கும், 9 அமைச்சர்களுக்கும் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.மேலும் கோவா மாநில சட்டப் பேரவையில் பாஜக அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோவா மாநில முதல்வராக பாரிக்கர் பதவியேற்பது இது நான்காவதுயாகும்.
5.பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.மும்பையின் முதல் மிதக்கும் ஓட்டலை  பந்த்ரா- வொர்லி கடற்பகுதியை இணைக்கும் பாலத்தின் பின்னணியில்  “ஏபி செலிஸ்டியல்” என்கிற மிதக்கும் ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மிதக்கும் ஓட்டலை மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்துள்ளார்.
2.கெவின் கேர் நிறுவனத்திலிருந்து பிரை வேட் ஈக்விட்டி நிறுவன மான சைரஸ் கேபிடல் நிறுவனம் வெளியேறியுள்ளது.


விளையாட்டு

1.பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் லீ சோங் வெய் 4வது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் தைவானின் டாய் ட்ஸூ யிங் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் World Consumer’s Rights Day).
நுகர்வோர் என்பவர் நாம் அனைவரும்தான். பாதுகாப்பு உரிமை, கேட்கும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, இழப்பீட்டு உரிமை போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. தரமற்றப் பொருட்களை கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்வதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 1963ஆம் ஆண்டு  முதல் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது.
2.கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பிய நாள் 15 மார்ச் 1493.
3.இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்ட நாள் 15 மார்ச் 1802.
4.தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறிய நாள் 15 மார்ச் 1961.
5.எக்ஸ்போ 70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமான நாள் 15 மார்ச் 1970.
6.முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்ட நாள் 15 மார்ச் 1985.
7.சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்ட நாள் 15 மார்ச் 2004.

 

– தென்னகம்.காம் செய்தி குழு