current-affairs

தமிழகம்

1.மதுரையைச் சேர்ந்த உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலரும், பிரபல தொழிலதிபருமான ந.மணிமொழியன் சென்னையில்  காலமானார்.இவருக்கு வயது 71.

இந்தியா

1.கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்படுள்ளார்.இவர் 2 ஆண்டு காலம் பணியாற்றுவார்.இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.
2.எந்தெந்த ஏடிஎம் இயந்திரங்கள்  இயங்குகின்றன என்பதை தெரிந்துகொள்ள http://atmkaro.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
3.நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வரும் நவம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4.நாடு முழுவதும் வரும்  டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
5.இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2000.
6.15 நவம்பர் 1949-ம் ஆண்டு நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் அப்தேவு இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
7.இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தில்லியில் பிரணாப் முகர்ஜி கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நவம்பர் 14 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உலகம்

1.அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக்கான ஆண்டு ஊதியமாக 1 டாலர் மட்டும் பெற்றுக் கொள்வேன் என்று அறிவித்துள்ளார்.
2.எகிப்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1,200 கோடி அமெரிக்க டாலர்கள் கடனுதவி  வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.