இந்தியா

1.கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்ட வல்லுநர் ஆலோசனைக்குழு உறுப்பினராக, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசான ராஜா குமரன் சேதுபதியின் மனைவி ராணி N. லட்சுமி குமரன் சேதுபதியை நியமித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக , டாக்டர். கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம், திருவனந்தபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.பங்களாதேஷை சார்ந்த Saima Wazed Hossain , உலக சுகாதார அமைப்பின் சார்பில் தென்கிழக்கு ஆசிய பிராந்திய ஆட்டிசம் விழிப்புணர்வு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.புற்றுநோயால் அவதிப்பட்ட நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலரான சீனாவின் லி ஜியாபோ காலமானார்.


விளையாட்டு

1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6,000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்துள்ளார்.ஏற்கனவே மிதாலி ராஜ், அடுத்தடுத்து 7 போட்டிகளில் அரை சதம் அடித்தும் உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.2003 – மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு