இந்தியா

1.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடைபெறும் JEE Advanced நுழைவுத்தேர்வில் சண்டிகாரைச் சேர்ந்த மாணவர் சர்வேஷ் மெக்தானி 366-க்கு 339 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய முதல் இடம் பெற்றுள்ளார்.
2.மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் அம்மாஆதாஅம்மு (அம்மு என்கிற ஜெயலலிதா) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை கன்னட மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் வெளியிட்டு உள்ளார்.
3.மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.
4.மருத்துவ துறையில் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க Skill for Life, Save a Life என்ற திட்டத்தை மத்திய சுகாதார துறை அமைச்சர் J.B. நட்டா துவக்கி வைத்துள்ளார்.
5.Indira Gandhi – A life in Nature என்ற புத்தகத்தை ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day).
உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது. இது 2025இல் 1.2 பில்லியனாக அதாவது இரு மடங்காக உயரப்போகிறது. சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா. இத்தினத்தை அறிவித்துள்ளது.
2.இன்று உலக காற்று தினம் World Wind Day).
உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.
3.1752-பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு