Current-Affair-Logo

தமிழகம்

1.இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 15 செப்டம்பர் 1909.

இந்தியா

1.இன்று தேசிய பொறியாளர்கள் தினம்.

இன்று விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்(பிறப்பு: 1861 செப். 15- மறைவு: 1962, ஏப். 12).இவருடைய பிறந்த நாளை ஒவ்வொரு  ஆண்டும் தேசிய பொறியியலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
2.சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குன்வர் பாய்(105), தனது 10 ஆடுகளை விற்று, வீட்டில் இரண்டு கழிப்பறைகளை கட்டியுள்ளார்.இதற்காக  தூய்மை இந்தியா திட்டத்தின் விருது இவருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் வரும் 17 ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருதினை வழங்குகிறார்.இந்த திட்டத்தை பிரசாரம் செய்யும் துாதராகவும் குன்வர் பாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையாளர் துர்கா பூஜை திருவிழா நாட்களில் கடவுளின் சிலைக்கு முன்பாக ‘செல்பி’ படம் எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

உலகம்

1.இன்று அனைத்துலக மக்களாட்சி நாள் (International Day of Democracy).
ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.

விளையாட்டு

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா 3-ஆவது வாய்ப்பில் 63.97 மீ. தூரம் ஈட்டி எரிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஏற்கனவே 2004-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார்.அப்பொழுது 62.15 மீ. தூரம் ஈட்டி எரிந்து சாதனை படைத்திருந்தார்.இப்பொழுது அவருடைய உலக சாதனையை அவரே முறியடித்துள்ளார்.இதன் மூலம்  பாரா ஒலிம்பிக்கில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.