இந்தியா

1.உத்திர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி.-க்கான இட ஒதுக்கீட்டை யோகி ஆதித்யநாத் அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.உத்திரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.கைரேகை மூலம் பணம் செலுத்தும் ‘பீம்-ஆதார்’ என்ற செயலியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம் செய்துவைத்தார்.
4.டெல்லியில் நேற்று முதல் குட்கா விற்பனைக்கு ஒரு வருடம் தடை விதிப்பதாக கெஜ்ரிவால் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய இணை தலைவராக ரவி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கு கனடா நாடு கௌரவ குடியுரிமை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 1 முதல் 8 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.மொத்தம் எட்டு நாடுகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரை பிரபலப்படுத்தும் வகையில், இந்த எட்டு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தூதுவர்களாக ஐ.சி.சி நியமனம் செய்துள்ளது.இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்சி, இலங்கையின் குமார் சங்கக்கரா, இங்கிலாந்தின் இயான் பெல், பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி, வங்கதேசத்தின் ஹபிபுல் பாஷர், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகியோர் தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இன்றைய தினம்

1.சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமான நாள் 15 ஏப்ரல் 1815.
2.ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 1892.
3.இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 1923.
4.தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 1976.

 

– தென்னகம்.காம் செய்தி குழு