current-affairs

தமிழகம்

1.70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ11,000-ல் ரூ12,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ5,000-ல் இருந்து ரூ6,000ஆக உயர்த்தப்படும் என்றார்.சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகத்துக்கு அப்துல் கலாம் விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது – நாமக்கல் மாவட்டம் ஜெயந்தி. அவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.சிறந்த மாநகராட்சிக்கான விருது திண்டுக்கல்லுக்கு கிடைத்துள்ளது. சிறந்த கூட்டுறவு வங்கி- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு கிடைத்துள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தமைக்கான விருது – டாக்டர் ராஜா கண்ணன். அவருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.சிறந்த சமூகப் பணியாளர் – எம்.பி.முகமது ரபிக்கு வழங்கப்பட்டது.சிறந்த நிறுவனம்- சிறுமலர் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப்பள்ளி சகோதரி ஜெசிந்தா ரோஸ்லினுக்கு விருது வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாப்ப்பு அளித்தமைக்கான விருது- நாமக்கல் அன்னை ஜெ.கே.கே. சம்பூரணி அம்மாள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.சிறந்த தொண்டு நிறுவனம்- முகப்பேர் மேற்கு கலைச்செல்வி கருணாலயம் சமூக நலச்சங்கம்.சிறந்த சமூகப் பணியாளர்- திருநின்றவூர் சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முரளிதரன்க்கு வழங்கப்பட்டது

இந்தியா

1.நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தில்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
2.இந்தியா பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாரிய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆன நாள் 15 ஆகஸ்டு 1947.

உலகம்

1.முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்ற நாள் 15 ஆகஸ்டு 1947.
2.தென் கொரியா உருவாக்கப்பட்ட நாள் 15 ஆகஸ்டு 1948.