current-affairs

தமிழகம்

1.இன்று இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 15 அக்டோபர் 1931.

இந்தியா

1.மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
2.ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம்

1.அணு ஆயுதத்தை ஏந்தியவண்ணம் தொலை தூரம் பறந்து சென்று இலக்கை தாக்க வல்ல ஆளில்லா விமானங்களை அமெரிக்கா தயாரித்துள்ளது
2.மலேசிய அறிவியல் அகடமியைச் சேர்ந்த நிபுணத்துவ ஆய்வுக்குழுவினர் புற்றுநோயைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.இக்குழுவில் மலேசிய இந்திய விஞ்ஞானியான டாக்டர் அபிமன்யுவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3.‘அய்யோ’ என்ற தமிழ் வார்த்தை உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இடம்பெற்றுள்ளது.செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இந்த வார்த்தை இடம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
4.70 ஆண்டு ஆட்சி நடத்திய தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் நலக்குறைவால் நேற்று  காலமானார். அவருக்கு வயது 88.
5.இன்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (International Day of Rural Women).
விவசாயத் துறையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் கிராமப்புற பெண்களாவர். உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறக்க முடியாது. இவர்கள் கிராம வளர்ச்சிக்கும், உணவு பாதுகாப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் பாடுபடுகின்றனர். அதுதவிர நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாக்கின்றனர். ஐ.நா.சபையானது 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
6.இன்று உலக கைகழுவும் தினம் (Global Handwash Day).
முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.

விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
2.டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடைபெற்ற  ‘பி’ பிரிவு ரஞ்சி போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுவப்னில் குகாலே – அன்கித் பாவ்னே ஆகிய இரு  வீரர்களும் 594 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.ரஞ்சி கோப்பை வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற புதிய சாதனையையும் படைத்தனர்.கேப்டன் சுவப்னில் குகாலே (351*) ரன்னும்,அன்கித் பாவ்னே (258*) ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒட்டுமொத்த முதல்தர போட்டி வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

20.இன்று திருவள்ளூர் மாவட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது.
இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.
உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது.