இந்தியா

1.2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் பட்டியலை RBI வெளியிட்டுள்ளது.இதில் எண்ணிக்கை அடிப்படையில் ICICI வங்கி முதல் இடத்தையும்,SBI வங்கி இரண்டாவது இடத்தையும்,ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.பண மதிப்பு அடிப்படையில் SBI வங்கி முதல் இடத்தையும்,பஞ்சாப் நேசனல் வங்கி இரண்டாவது இடத்தையும்,ஆக்ஸிஸ் வங்கி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
2.வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
3.மணிப்பூரில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வசதியாக மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபிசிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இவர் ராஜினாமா கடிதத்தை மணிப்பூர் ராஜ்பவனுக்கு இபோபிசிங் அனுப்பியுள்ளார்.
4.சென்னை உள்பட பெரு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,000 வீதமும்,திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.3,000 வீதமும்,சிறிய ஊர்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,000 வீதமும்,கிராமங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 வீதம், குறைந்த பட்ச தொகையாக இருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஹைதாராபாத்தில் நடைபெற்ற 35வது தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி K.பவித்ரா தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று பை தினம் (Pi Day).
பை (TT) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் நாளை பை நாளாகக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14ஐ குறிக்கும். இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். பை தினம் முதன்முதலாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்டது.
2.இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் (Albert Einstein Birth Anniversary Day).
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்டவர். இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டதோடு, குவாண்டம், புள்ளியியல், எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.
3.லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்ட நாள் 14 மார்ச் 1994.
4.ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்த நாள் 14 மார்ச் 1995.

 

– தென்னகம்.காம் செய்தி குழு