தமிழகம்

1.தமிழக அரசின் உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக விடுப்பில் சென்றுள்ள தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ்க்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.அணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
2.இந்தியாவில் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் எல் & டி நிறுவனம், ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிறுவனமான எம்.பி.டி.ஏ. வுடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


உலகம்

1.இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரண், தமிழ் ஐக்கிய சுதந்திர கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
2.2016-ஆம் ஆண்டுக்கான பாஃப்டா விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்றது.சிறந்த துணை நடிகருக்கான விருது “லயன்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் தேவ் படேலுக்கு வழங்கப்பட்டது.“லா லா லேண்ட்” என்ற திரைப்படத்துக்கு  சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த நடிகைக்கான விருது இந்த திரைப்படத்தின்  கதாநாயகியான எம்மா ஸ்டோனுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது டாமியன் சாúஸலுக்கும் வழங்கப்பட்டன.


வணிகம்

1.டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேடன் நிறுவனம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் 50 ஏக்கரில் தன்னுடைய முதல் ஆலையை தொடங்க உள்ளது.இந்த ஆலை ரூ.350 கோடியில் அமைய உள்ளது.இந்நிறுவனம் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான அலுமினிய பாகங்களை தயாரிக்கிறது.
2.என்எஸ்இ புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் விக்ரம் லிமயே சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஹைதராபாதில் நடைபெற்ற இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
3.வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 19 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல், கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.இதன்மூலம் அதிக போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 போட்டிகளில் (17 வெற்றி, 10 டிரா) தோல்விகளை சந்திக்காமல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக காதலர் தினம் (World Valentine’s Day).
ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். வாலன்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்துவைத்தார். காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை கி.பி. 269ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2.ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 1924.
3.சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமான நாள் 14 பிப்ரவரி 1956.

 

– தென்னகம்.காம் செய்தி குழு