current_affairs

இந்தியா

1.இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள், தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கு பதிலாக ஆன்லைனில் தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் முறை அமலாக உள்ளது.இந்த ஆன்லைன் வாக்குப்பதிவுக்காக மத்திய அரசின் கணினி வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மூலம் தனி மென்பொருளை உருவாக்கியுள்ளது.
2.கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் செளமியா என்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து,உச்ச நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடந்த  நவம்பர் 11ல் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது இதுவே முதல் முறை ஆகும்.
3.இன்று இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன.

உலகம்

1.இன்று உலக சர்க்கரை நோய் தினம் (World Diabetes Day).
சர்க்கரை நோய் என்பது வலியில்லாமல் ஆளைக்கொல்லும் நோயாக உள்ளது. இந்த நோய்க்கு இன்சுலின் மருத்தினை பிரட்ரிக் பான்ரிங் என்பவர் 1921இல் கண்டுபிடித்தார். இவரின் பிறந்த தினமான நவம்பர் 14ஐ உலக சர்க்கரை தினமாகக் கொண்டாடுகின்றனர். சர்க்கரை நோயாளி இல்லாத உலகைக் காண்போம் என்கிற நோக்கில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.கூகுள் தனது முகப்பில் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் நடத்திய Doodle 4 Google போட்டியில் Live in the present என்ற தலைப்பில் புனேவை சார்ந்த பள்ளி மாணவி Anvita Prashant Telang உருவாக்கிய Doodle ஐ தனது முகப்பில் இடம்பெற செய்துள்ளது.

விளையாட்டு

1.தில்லி அடுத்துள்ள குர்கானில் நடைபெற்ற சர்வதேச மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில்  இந்தியாவின் அதிதி அசோக்  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.மேலும் சர்வதேச மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டி ஒன்றில்  இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.இவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார்.
2.பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற உலக மணிலா மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் இந்திய வீரர் எஸ்.பி. சவ்ராசியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.முதன்முறையாக அன்னிய மண்ணில் நடந்த ஆசிய டூர் தொடரில் சாம்பியன் பட்டத்தை இவர் கைப்பற்றியுள்ளார்.
3.கடந்த அக்டோபர் 29 / 2016 அன்று இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிவீர்கள், தங்கள் அன்னையின் பெயர் பொறிக்கப்பட்ட பனியனை அணிந்து விளையாடினர்.