தமிழகம்

1.வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு கிழக்குப் பிராந்திய கப்பற்படைக்குச் சொந்தமான ‘ஐஎன்எஸ் சிவாலிக்’ மற்றும் ‘ஐஎன்எஸ் கட்மட்’ ஆகிய 2 கப்பல்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் நேற்று சென்னையை வந்தடைந்தன.

2.புயல் காரணமாக சென்னையில் நேற்று 2-வது நாளாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.புயல் பாதிப்பு களால் மின் தடை ஏற்பட்டதால் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை.

இந்தியா

1.மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்துள்ளது.

2.மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் ரூ.12.44 லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.
3.சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.
4.கடந்த 2001 ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 15-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.


விளையாட்டு

1.உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணியில்  குஜராத் கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது.பழைய மைதானத்தை தகர்த்து விட்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
2.உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
3.9-ம் நிலை இந்திய வீரர் ஒருவர் சதம் கண்ட பெருமையை எட்டினார் ஜெயந்த் யாதவ்.


இன்றைய தினம்

1.1503 புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரான நாஸ்டிராமஸ் பிறந்தார்.
2. 1799 அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் தனது 67வது வயதில் காலமானார்.
3.1918 கடலூரில் சிறைத்தண்டனை பெற்ற பாரதியார் விடுதலை செய்யப்பட்டார்.


– தென்னகம் செய்தி குழு