இந்தியா

1.அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு , கர்நாடகா மாநில அரசின் சார்பில் பெங்களூருவில் Quest For Equity என்ற சர்வதேச மாநாடு , ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டின் கருப்பொருள்(Them ) – Reclaiming Social Justice, Revisiting Ambedkar ஆகும்.
2.பிரதம மந்திரி ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலை விருது 2014-15 & 2015-16 டாடா ஸ்டீல் நிறுவனம் பெற்றுள்ளது.
3.WINGS 2017 – “Sab Uden, Sab Juden” – Expanding Regional Connectivity என்னும் விமான போக்குவரத்து துறை மாநாடு , புதுடெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது.
4.World Food India 2017 என்னும் உலக உணவு திருவிழா நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெறுகிறது.
5.GST வரி விதிப்பின் கீழ் ஒரு பொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை அறிய GST Rate Finder App-ஐ நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்துள்ளார்.
6.மேற்கு வங்களத்தில் Uttar Dinajpur மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாக ஜோயிதா மொண்டல் (Joyita Mondal) என்னும் திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.
7.இந்தியவிலேயே முதலாவதாக ராஜஸ்தான் அரசு , கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. தொடக்க கூட்டுறவு சங்கம் – 5ம் வகுப்பு வரையும்,
மாவட்ட கூட்டுறவு சங்கம் – 8ம் வகுப்பு வரையும்,மாநில கூட்டுறவு சங்கம் – 10 முதல் இளங்கலை பட்டம் வரையும், படித்திருக்க வேண்டும்.
8.மத்திய அரசின் இணைய அங்காடி (GeM) திட்டத்தில் முதற்கட்டமாக ஆந்திரா , தெலுங்கானா , அருணாச்சால பிரதேஷ் , குஜராத் , அஸ்ஸாம் & பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் இணைந்துள்ளன.


உலகம்

1.22வது உலக பெட்ரோலிய மாநாடு , துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஜூலை 09 முதல் ஜூலை 13 வரை நடைபெற்று முடிந்தது.


இன்றைய தினம்

1.1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
2.1976 – கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது.
3.1995 – MP3 என பெயரிடப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு