Current-Affairs-Updates

தமிழகம்

1.தமிழகத்தில் மொபைல்(நடமாடும்) நூலகம் தஞ்சாவூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.நேபாளத்தின் மிக பிரபலமான சுற்றுலாத்தளமான போகரா – டெல்லி இடையே புதிய நேரடி பஸ் வசதி துவங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே டெல்லி – காத்மாண்டு ,வாரணாசி – காத்மாண்டு,டெல்லி  – மகேந்திரநகர் இடையே பஸ் வசதி நடைபெற்று வருகிறது.
2.1960-இல் நடைபெற்ற ரோம் ஓலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த ஜோ ஆன்டிக் (90) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

உலகம்

1.நேபாளத்தின் புதிய மற்றும் முதல் பெண்  தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கியின் நியமனத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
2.இங்கிலாந்து புதிய பிரதமராக தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றார்.அவருக்கு வயது 59.இவர் இங்கிலாந்தின் 2-வது பெண் பிரதமர் ஆவார்.
3.சமீபத்தில் நேட்டோ உச்சி மாநாடு போலந்து நாட்டில் நடைபெற்றது
4.கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்ட நாள் 14 ஜூலை 1976.
5.MP3 என பெயரிடப்பட்ட நாள் 14 ஜூலை 1995.
6.ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள் 14 ஜூலை 1958.