தமிழகம்

1.தமிழக வருவாய்த் துறையின் பெயர்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.புகையிலை கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் வழங்கும் சிறப்பு அங்கீகார விருது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் இயங்கிவரும் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில், சமூக வளர்ச்சி அலுவலராக சாதனா கின்னார் என்ற திருநங்கை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் தொழில் நிர்வாகம் மற்றும் சமூக சேவை படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.


விளையாட்டு

1.சுலோவேக்கியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது உலக தனிநபர் செஸ் போட்டியில், திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த கே.ஜெனித்தா, சாம்பியன் பட்டமும், தங்க பதக்கமும் வென்றுள்ளார்.
2.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், லத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென்கோ, சிமோனா ஹாலெப் (ரூமேனியா) ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் (World Blood Donor’s Day).
இரத்தத்தில் உள்ள வகைகளை முதன் முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன் மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. இரத்த தானம் செய்வதன் மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
2.1962- ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
3.1967-மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு