தமிழகம்

1.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அந்த வருடத்துக்கான தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் விருதுகள் பெறுபவர்களின் விவரங்கள் பின்வருமாறு,
1. திருவள்ளுவர் விருது- 2017, புலவர் பா.வீரமணி,
2. தந்தை பெரியார் விருது-2016, பண்ருட்டி ராமச்சந்திரன்,
3. அண்ணல் அம்பேத்கர் விருது–2016, டாக்டர் துரைசாமி,
4. பேரறிஞர் அண்ணா விருது–2016, கவிஞர் கூரம் துரை,
5. பெருந்தலைவர் காமராசர் விருது-2016, நீலகண்டன்,
6. மகாகவி பாரதியார் விருது-2016, பேராசிரியர் முனைவர் கணபதிராமன்,
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது-2016, கவிஞர் பாரதி,
8. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது-2016, பேராசிரியர் மறைமலை இலக்குவனார்,
9. முத்தமிழ்க் காவலர்  கி.ஆ.பெ. விசுவநாதம் விருது-2016, மீனாட்சி முருகரத்தினம்,
ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் இந்த விருதுகளை ஜனவரி 15ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கவுள்ளார்.


இந்தியா

1.பிப்ரவரி 2017ல் நடைபெறவுள்ள மணிப்பூர் மற்றும் உத்ரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் , முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயருடன் புகைப்படமும் இடம் பெற உள்ளது.
2.மகாராஷ்டிரா மாநில பள்ளி மாணவர்களின் தினசரி வருகை onlineல் பதிவு செய்வதற்காக அடுத்த கல்வியாண்டு முதல் Upastithi app அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளின் மாணவர் வருகை விபரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3.ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து அதிநவீன மேம்படுத்தப்பட்ட “பினாகா’ மார்க்-2” ஏவுகணை வெற்றிகரமாக கடந்த ஜனவரி 12-ம் தேதி  பரிசோதிக்கப்பட்டது.இந்த “பினாகா மார்க் – 2” ஏவுகணையை மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள போர்க்கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏஆர்டிஈ), தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.இந்த ஏவுகணையில் தாக்குதல் நடத்துவதற்கான குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தல், இலக்கை தேவைக்கேற்ப திடீரென மாற்றியமைத்தல், திசையறிதல் உள்ளிட்ட  பல்வேறு வசதிகள் உள்ளன.
4.இந்தியாவின் தனியார் விமானச்சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் பிரபல வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில் 205 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.


உலகம்

1.2017 ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் நாட்டில் உடல் ஆரோக்கியத்துடன் இருப்போர்கள் தமது உடல் உறுப்புகளை தானம் வழங்குவது  கட்டாய சட்டமாக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், மற்றும் ஆஸ்திரியாவில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2.வியட்நாம் நாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் அந்நாட்டின் சுகாதார துறை வரைவு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
3.எதிரிகளை திணறடிக்க கூட்டம் கூட்டமாக சென்று தாக்க கூடிய சிறிய ரக ஆளில்லா போர் விமானங்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.இதற்கு “ஸ்வார்ம்” என பெயரிடப்பட்டுள்ளது.
4.அமெரிக்காவில் ஓராண்டு காலம் வசிக்கும் கியூபா மக்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 129-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் அதிகபட்ச தரவரிசை இதுதான்.இந்திய அணி இதற்கு முன்னர் 2005-ஆம் ஆண்டில் 127-ஆவது இடத்தைப் பிடித்தது குற்பிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள் 14 ஜனவரி 1974.
2.ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்ட நாள் 14 ஜனவரி 1539.
3.கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட நாள் 14 ஜனவரி 1690.
4. உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப் பட்ட நாள் 14 ஜனவரி 1996.

 

– தென்னகம்.காம் செய்தி குழு