current-affairs

இந்தியா

1.மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஆந்த்-ல் இந்தியாவின் முதல் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு அலை உற்றுநோக்கல் ஆய்வகம்(LIGO- Laser Interferometer Gravitational-Wave Observatory) அமைக்கப்பட உள்ளது.இது உலகிலேயே மூன்றாவது ஆய்வகம் ஆகும்.அமெரிக்காவிற்கு வெளியில் அமையப்போகும் முதல் ஆய்வகம் ஆகும்.ஏற்கனவே வாஷிங்டன் & லிவிங்ஸ்டன், லூசியானாவில் இந்த ஆய்வகம் செயல்படுகிறது.
2.கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை ஒடிசா அரசு துவக்கியுள்ளது.இந்த மாதத்தில் ஒடிசா அரசு செயல்படுத்தும் மூன்றாவது திட்டம் இதுவாகும்.ஏற்கனவே இந்த மாதத்தில் மஹாபிரயான்( இறந்தவர்களின் உடலை மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லுதல்) திட்டமும், பிஜு கன்யா ரத்னா (பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துதல்) திட்டத்தையும் துவக்கியுள்ளது.
3.சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு மாநிலத்திற்குள்ளான விமான இணைப்பை அதிகரிக்க விமானத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
4.தேசிய மாதிரி ஆய்வு அலுவலம் (NSSO-National Sample Survey Office) கிராமப்புற பகுதிகளில் உள்ள சுகாதார வசதிகளின் படி சுத்தமான இந்திய மாநிலமாக சிக்கிமை அறிவித்துள்ளது. இவ்வரிசையில், கேரளா, மிசோரம், இமாசலப் பிரதேசம், நாகாலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆய்வு முடிவை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.
5.இந்தியாவில்  முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசத்தில் “ட்விட்டர் சேவா” என்ற சேவையை  துவங்கியுள்ளது.இதன் மூலம் தொழில் முனைவோருக்கு நிதி, ஆதரவு அல்லது அரசு உதவி போன்ற அனைத்துவிதமான அரசு தேவைகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
6.புது தில்லியில் நடைபெற்ற இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சிலின்  (ICFA)  9வது 2016 விவசாய தலைமை உச்சி மாநாட்டில் தோட்டக்கலை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஹரியானா அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கான அங்கீகாரமாக “மிகச்சிறந்த தோட்டக்கலை மாநிலம்” என்ற விருதை வழங்கியுள்ளது.மேலும் 2016-ஆம் ஆண்டின் “சிறந்த விவசாய மாநில” விருதை ஒரிசா பெற்றுள்ளது.
7.12வது யூத் அபியாஸ் – 2016 உத்ரகாண்ட்டில் வரும் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறுகிறது.இதில் இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டு வருடாந்திர ராணுவ பயிற்சி நடைபெறுகிறது.மேலும் இதில் இந்திய ராணுவத்தின் காங்கோ படைபிரிவு கலந்து கொள்ளும்.

உலகம்

1.விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2000.
2.இந்தியாவை மகப்பேறு கால மற்றும் புதிதாய்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு டெட்டானஸ் நோயற்ற நாடாக உலக சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது.