தமிழகம்

1.உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருந்து இயற்கை மரணம் அடையும் விவசாயி குடும்பத்துக்கான உதவிதொகையினை ரூ.10,000யிலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் Matoshree என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
2.“சௌரிய சக்ரா” விருது பெற்ற , முதல் நாகாலாந்து காவல் அதிகாரி எனும் பெருமையை Atu Zumvu பெற்றுள்ளார்.
3.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் Indian Institute of Petroleum and Energy (IIPE) எனும் கல்வி நிலையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
4.மே ஒன்றாம் தேதி முதல் 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றம் செய்ய எண்ணைய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.புதுச்சேரி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம், ராஜஸ்தான் மாநிலம் உதாம்பூர், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூர் மற்றும் சண்டிகாரில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
5.மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ” உடான் ” [ UDAN — Ude Desh Ka Aam Naagrik ] திட்டத்தினை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், அமைச்சகங்களுக்கு இடையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் தலைவராக சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜிவ் நயன் சௌபே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6.மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (நீட்) 2018-19-ம் கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தற்போது ‘நீட்’ தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி ஆகிய 10 மொழிகளில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழி பெண் ஆஷா கெம்கா (65), Asian Businesswoman of Year விருதை பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று தீத்தடுப்பு தினம் (Fire Extinguishing Day).
தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1723ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆம்புரோஸ் காட்ஃபரே என்பவர் தீயணைப்பானைக் கண்டுபிடித்தார். தீயணைப்பானைக் கொண்டு நாமே தீயை அணைத்துவிடலாம்.
2.இன்று உலக சித்த மருத்துவ நாள் (World Siddha day).
உலக சித்த மருத்துவ நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
3.இன்று இந்திய சட்ட நிபுணர், அரசியல்வாதி அம்பேத்கர் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 14 ஏப்ரல் 1891.
4.நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்ட நாள் 14 ஏப்ரல் 1828.

 

– தென்னகம்.காம் செய்தி குழு