Daily-Current-Affairs

தமிழகம்

1.தமிழக அரசின் தலைமை செயலகம் செயல்படும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீதுள்ள உயர்ந்த கொடிக் கம்பமே, நாட்டில் உள்ள தேசியக் கொடி ஏற்றப்படும் கம்பங்களில் மிக உயரமானது.சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் பறக்க விடுவதற்காக, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற பிரம்மாண்ட தேசியக் கொடி, மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.
2.பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

இந்தியா

1.பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள 983 ரயில் நிலையங்களில் நிர்பயா நிதியத்தின் கீழ் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
2.ஜம்மு, திருப்பதி, கேரள மாநிலத்தின் பாலக்காடு, கோவா, கர்நாடகத்தின் தார்வார்ட், சத்தீஸ்கரில் உள்ள பிலாய் ஆகிய பகுதிகளில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைத் (ஐஐடி) நிறுவுவதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.
3.ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச வேளாண் விவசாயிகள் தொழில்நுட்ப மாநாடு நவம்பர் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ராஜஸ்தான் மாநில அரசும், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (ஃபிக்கி) இணைந்து “கிராம்- 2016′ என்ற பெயரில் ஜெய்ப்பூரில் மாநாட்டை நடத்துகிறது.

உலகம்

1.இன்று பாகிஸ்தான் விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 14 ஆகஸ்டு 1947.
2.அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் அமைந்துள்ள சேவியர் பல்கலைகழக வளாகத்தில் உலகின் முதல் பீட்சா ATM ஆகஸ்ட் 10ல் நிறுவப்பட்டுள்ளது.24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ATMல் 12 இன்ச் வரைக்குமான பீட்சா கிடைக்கும்.டெபிட், கிரெடிட் மற்றும் ஸ்டூடண்ட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த பீட்சாவை வாங்கமுடியும்.