தமிழகம்

1.தமிழக மீனவ இளைஞர்கள் 100 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து, சர்வதேச அளவிலான சான்றிதழ் கொடுக்கும் திட்டத்தை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் தொடங்கியுள்ளது.பயிற்சி முடித்த வீரர்களுக்கு இந்திய உயிர் காக்கும் கூட்டமைப்பின் மூலம் ‘சர்வதேச உயிர் காக்கும் நீச்சல் வீரர்’ என்ற சான்றிதழ் வழங்கப்படும்.


இந்தியா

1.1986 முதல் இந்திய கடற்படையில் சேவையாற்றிய INS கார்வார் (M67) மற்றும் INS காக்கிநாடா (M70) ஆகிய இரண்டு போர்க் கப்பல்கள் ஓய்வு பெற்றுள்ளன.இந்த இரண்டு கப்பல்களும் ரஷ்யாவின் தயாரிப்பு ஆகும்.
2.பங்களாதேஷைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு “முக்தி ஜோதா உதவித் தொகை” திட்டத்தின் மூலம், 35 கோடி ரூபாய் அளவுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
3.முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யப் பயன்படுத்தப்படும் முத்தலாக் பிரச்சனையை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் ( சீக்கியர் )
நீதிபதி. குரியன் ஜோசஃப் ( கிறிஸ்துவர் )
நீதிபதி. ஆர்.எஃப். நாரிமன் ( பார்சி )
நீதிபதி. யூ.யூ.லலித் ( இந்து )
நீதிபதி. நஜீர் ( முஸ்லிம் )


உலகம்

1.தென்கொரியாவின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன் ஜே இன் வெற்றி பெற்றுள்ளார்.கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஹாங் ஜுன் பியோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியன் ஹை ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
2.இலங்கையில் மே 12 முதல் மே 18ம் தேதி வரை தமிழின படுகொலை வாரம், தமிழர் அமைப்புகள் சார்பில் அனுசரிக்கப்படுகிறது.


இன்றைய தினம்

1.இன்று உலக நியாயமான வர்த்தக தினம் (World Fair Trade Day).
உலகம் முழுவதும் நியாயமான வர்த்தகம் செய்பவர், உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக நியாயமான வர்த்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக நியாயமான வர்த்தகர் சங்கம் இத்தினத்தை அறிவித்துள்ளது. 75 நாடுகளில் 450 அமைப்புகளின் ஒப்புதலுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள் 13 மே 1648.
3.சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆன நாள் 13 மே 1967.

 

– தென்னகம்.காம் செய்தி குழு