இந்தியா

1.ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு உரிமம் கோரப்பட்ட நிலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்க தவறியதால் அதனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக 6 பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3.மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் ஒரே நேரத் தில் ஒரே இடத்தில் 104 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு கடந்த மார்ச் 8-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. உலகிலேயே இந்த எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.எனவே இந்நிகழ்ச்சி “கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளது.
4.ஒடிசா மாநிலம் பலசோரில் உள்ள சாந்தினி கடல் பகுதியில் 200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட “பிரமோஸ் சூப்பர்சோனிக்” ஏவுகணை கடந்த மார்ச் 11-ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதி்க்கப்பட்டது.இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும்.
5.ஐ.நா. சபையின் மகளின் தின நிகழ்ச்சியில் (08 மார்ச் 2017- ல்) ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டிய நடனம் ஆடியுள்ளார்.ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.ஐஸ்வர்யா தனுஷ் 2016 ஆகஸ்டில் இருந்து, ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதுவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
6.இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.இதில் IFSC மற்றும் MICR கோடுகள், வங்கி விடுமுறை நாள்கள், தற்போதுள்ள வட்டி விகிதங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.அதேபோல், ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்புகளையும் இந்த ஆப்பில் தெரிந்து கொள்ள முடியும்.


உலகம்

1.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து திருமண மசோதா கடந்த மார்ச் 09-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.அதிபர் மெமூன் ஹுசைனின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டதும் இந்து திருமண சட்டம் அமலுக்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
2.வலைதளங்கள் அறிமுகமாகி 26 ஆண்டுகள் கழித்து ஆப்ரிக்கா நாடு சொந்தமாக, தனி இண்டெர்நெட் டொமைனை தற்போது பெற்றுள்ளது. .africa என்ற தனி டொமைன் தற்போது ஆப்ரிக்கா நாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ZA சென்ட்ரல் ரெஜிஸ்டரி என்ற கம்பெனி இந்த டொமைனை உருவாக்கியுள்ளது.ஜுலை மாதம் முதல் இந்த டொமைன் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மார்ச் 05 முதல் மார்ச் 07 வரை இந்திய பெருங்கடல் நாடுகளின் கூட்டமைப்பு சார்பிலான மாநாடு நடைபெற்றது.இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.இந்த மாநாட்டின் கருப்பொருள் – Strengthening Maritime Cooperation for a Peaceful, Stable and Prosperous Indian Ocean ஆகும்.


இன்றைய தினம்

1.இன்று காமன்வெல்த் நாடுகள் தினம் (Commonweath Countrie’s Day).
மேபிள் இலை பொறிக்கப்பட்ட சின்னம் காமன்வெல்த்தின் கொடியாக உள்ளது. தலைமைச் செயலகம் லண்டன் நகரில் செயல்படுகிறது. காமல்வெல்த் தலைவராக இருந்த பியாரி ட்ரூடியா (Pierre Trudeau) என்பவர் காமன்வெல்த் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கள் அன்று கொண்டாடுமாறு 1976ஆம் ஆண்டில் அறிவித்தார்.
2.ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்ட நாள் 13 மார்ச் 1639.
3.பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்ட நாள் 13 மார்ச் 1900.
4.இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்ற நாள் 13 மார்ச் 1940.
5.அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பிய நாள் 13 மார்ச் 1969.

 

– தென்னகம்.காம் செய்தி குழு