தமிழகம்

1.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2.சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் செய்யப்பட்டன.


இந்தியா

1.கோலார் தங்கவயலில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களின் முகப்பில் பல ஆண்டு காலமாக தமிழில் எழுதப்பட்டிருந்த ரயில் நிலையங்களின் பெயர்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.மாரிகுப்பம், சாம்பியன், ஊரிகம், கோரமண்டல், பெமல்நகர் ஆகிய பெயர்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.
2.ஒடிஷாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை உருவாக்கியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.இந்த மணல் கோட்டை 48 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதாகும்.பட்நாயக்கும் அவரது 45 மாணவர்களும் இணைந்து 9 நாட்களில் இந்த பிரமாண்ட மணல் கோட்டையை உருவாக்கி உள்ளனர்.


விளையாட்டு

1.பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.பின் இந்திய அணி 17.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இதற்கு முன்பு 2007 மற்றும் 2012-ல் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 250 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.இவர் நேற்று வங்காள தேசத்துக்கு எதிராக நடைபெற்ற  முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் முஷ்பிகுர் ரகீம் விக்கெட்டை கைப்பற்றினார். இது அவருக்கு 250-வது விக்கெட் ஆகும்.45-வது டெஸ்டில் அவர் 250-வது விக்கெட்டை எடுத்துள்ளார்.இதற்கு முன்பு டென்னிஸ் லில்லி (ஆஸ்திரேலியா) 48 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக வானொலி தினம் (World Radio Day).
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.
2.அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2004.
3.சோவியத் நீராவிக்கப்பல் செலியூன்ஸ்கின் 111 பேருடன் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கிய நாள் 13 பிப்ரவரி 1934.
4.பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடான நாள் 13 பிப்ரவரி 1960.

 

– தென்னகம்.காம் செய்தி குழு