tamil

தமிழகம்

1.தமிழக அரசின் இல்லந்தோறும் இணையம் வழங்கும் திட்டம் முதல்கட்டமாக தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது.இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்துவதற்காக வரும் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களைப் பெற www.tactv.in என்ற இணையதளத்தில் வரும் 14 -ஆம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
2.அகில இந்திய சிறந்த காதி நெசவாளர் விருது சின்னாளபட்டியை திண்டுக்கல்லைச் சேர்ந்த ரெங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு 3 ஆண்டுகள் வரை தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2.‘யூடூப்’ நிறுவனம் இந்திய குழந்தைகளை கவரும் பொருட்டு ‘யூடூப் கிட்ஸ்’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

விளையாட்டு

1.துபாயில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் ஹாக்கி தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில் இந்தியாவின் ஹாக்கி தலைவராக உள்ள நரேந்தர் பத்ரா சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.ஆஸ்திரேலியாவில் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள 4 நாடுகள் ஹாக்கித் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரகுநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.