தமிழகம்

1.சென்னை மாநகராட்சியின் 20 மேல்நிலை மற்றும் 8 நடுநிலைப் பள்ளிகளில் வள வகுப்பறைகள் (Smart Classes) அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்தியா

1.வருமான வரித்துறை வரி செலுத்துவோரின் வசதிக்காக “ஆய்கர் சேது” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.


உலகம்

1.ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல கூடிய ஒகினோஷிமா தீவு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீவுக்கு செல்ல வருடத்திற்கு 200 ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை வரை இந்த பதவியில் நீடிப்பார்.மேலும் ஜாகிர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ராகுல் டிராவிட் வெளிநாட்டுத் தொடர்களுக்கான பேட்டிங் ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2.கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றவர் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா.இவரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவிக்கு தமிழக அரசு இவரை நேரடியாக நியமனம் செய்துள்ளது.


இன்றைய தினம்

1.1908 – லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்கேற்றனர்.
2.1930 – முதலாவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு