current3

தமிழகம்

1.இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்  வைரமுத்து பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 13 ஜூலை 1953.
2.குமரி மாவட்டம் இணையத்தில் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா

1.ரயில்வே இருப்புப்பாதைகளில் ஏதேனும் இடையூறுகள் இருக்கின்றனவா என்பதை 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே இன்ஜின் டிரைவர்கள் அறிந்துகொள்ள ரேடார் தொழில் நுட்ப எச்சரிக்கை கருவி TRI – NETRA வை  பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
2.அஞ்சல்துறையின் மூலம் பாட்டிலில்  அடைக்கப்பட்ட கங்கை நீரை வீட்டிற்கே (கட்டண சேவை மூலம்) கொண்டு வந்து தரும் “கங்காஜல்”(Gangajal ) திட்டத்தை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பீகார் தலைநகர் பாட்னாவில் துவக்கி வைத்துள்ளார்.ரிஷிகேஷ், கங்கோத்ரி ஆகிய இரு இடங்களிலிருந்து கங்கை நீர் பெறப்படுகிறது. தமிழகத்தில், முதல்கட்டமாக சென்னை,திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தருமபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகம்

1.சீனாவில் தயாரிக்கப்பட்ட ராணுவப் போக்குவரத்து விமானமான ஒய்-20 ரக விமானங்கள், அந்த நாட்டு ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன.200 டன் வரையிலான எடையை இந்த விமானங்கள் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
2.13 ஜூலை 1923-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் “ஹாலிவுட் குறியீடு” அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது “ஹாலிவுட்லாந்து” என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
3.13 ஜூலை 1923-ம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவேயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக்கில் 112 ஆண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டுள்ள கோல்ப் போட்டியில் இந்தியா சார்பில் அனிர்பன், சவ்ரசியா, ஆதித்  ஆகிய மூவர் தகுதி பெற்றுள்ளனர்.இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் 120 நட்சத்திரங்கள் தகுதி பெற்றுள்ளனர்.